
மத்தியப் பிரதேச மாநிலம், சத்னா மாவட்டத்தில் ரூ.29 லட்சம் இருந்த ஏடிஎம் இயந்திரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:
அமர்பதான் நகரில் சாலையோரம் இருந்த ஏடிஎம் இயந்திரத்தை வியாழக்கிழமை நள்ளிரவில் உடைத்து அதில் இருந்து பணத்தை கொள்ளையடிக்க சிலர் முயன்றனர். எனினும், இயந்திரத்தை உடைக்க முடியாத காரணத்தால், இயந்திரத்தை தூக்கிச் சென்றனர். அப்பகுதி வாசிகள் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்ததை அடுத்து, இதுதொடர்பாக ஏடிஎம் மையத்தில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறோம் என்று போலீஸார் தெரிவித்தனர்.