13 மாநிலங்களில் இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு! தமிழகத்துக்கும் அறிவிக்கிறதா பாஜக?

கேரளா, தெலங்கானா, உத்தரப் பிரதேசம் உட்பட 13 மாநிலங்களில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது.
13 மாநிலங்களில் இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு! தமிழகத்துக்கும் அறிவிக்கிறதா பாஜக?


கேரளா, தெலங்கானா, உத்தரப் பிரதேசம் உட்பட 13 மாநிலங்களில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது.

மகாராஷ்டிரா மற்றும் ஹரியாணா மாநிலங்களுக்கான பேரவைத் தேர்தலை தேர்தல் ஆணையம் கடந்த 21-ஆம் தேதி அறிவித்தது. இந்த தேர்தலோடு நாடு முழுவதும் 18 மாநிலங்களில் காலியாகவுள்ள 64 பேரைவத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன்மூலம், தமிழகத்தில் காலியாகவுள்ள விக்கிரவாண்டி மற்றும் நான்குனேரி ஆகிய பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வந்தது. இந்தத் தேர்தல் அக்டோபர் 21-ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் பதிவான வாக்குகள் 24-ஆம் தேதி எண்ணப்படுகிறது.

இந்நிலையில், அஸாம், பிகார், சத்தீஸ்கர், ஹிமாச்சல பிரதேசம், கேரளா, மத்தியப் பிரதேசம், மேகாலயா, ஒடிஸா, பஞ்சாப், ராஜஸ்தான், சிக்கிம், தெலங்கானா மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய 13 மாநிலங்களில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலுக்கான 32 வேட்பாளர்கள் பெயர் பட்டியலை பாஜக செயல் தலைவர் ஜெ.பி. நட்டா இன்று வெளியிட்டார். 

தமிழகத்தில் பாஜகவின் நிலைப்பாடு:

தமிழகத்தைப் பொறுத்தவரை பாஜக, அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. விக்கிரவாண்டி, நான்குனேரி பேரவைத் தொகுதிகள் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியான பிறகு, இதற்கான வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் பணியில் அதிமுக மும்முரம் காட்டியது. இதன்பிறகு, விக்கிரவாண்டி தொகுதியில் எம்.ஆர். முத்தமிழ்செல்வனும், நான்குனேரி தொகுதியில் ரெட்டியார்பட்டி வெ. நாராயணனும் அதிமுக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

இந்த இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கூட்டணிக் கட்சிகளான தேமுதிக, பாமக, தமாகா ஆகிய கட்சிகள் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துவிட்டனர். ஆனால், பாஜக தரப்பில் இருந்து வெளிப்படையான ஆதரவு எதுவும் வரவில்லை. இது நான்குனேரி தொகுதியில் பாஜக போட்டியிட வாய்ப்பிருப்பதாக சந்தேகத்தை எழுப்பியது. 

இந்நிலையில், நான்குனேரி தொகுதியில் போட்டியிட பாஜக வேட்பாளர்கள் பெயரில் விருப்பமனு அளிக்கப்பட்டதாக இன்று தகவல் வெளியானது. இந்த தகவல், அந்த சந்தேகத்தை தற்போது மேலும் வலுப்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com