சட்டப்பிரிவு 370 ரத்து: கம்யூனிஸ்ட் தலைவர் தாரிகமி உச்சநீதிமன்றத்தில் முறையீடு

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை அளிக்கும் சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்தது தொடர்பான விவகாரங்கள் குறித்து கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தாரிகமி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை அளிக்கும் சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்தது தொடர்பான விவகாரங்கள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் முகமது யூசுப் தாரிகமி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். 

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த மாதம் ஆகஸ்ட் 5-ஆம் தேதி ரத்து செய்தது. இதையடுத்து, முகமது யூசுப் தாரிகமி உட்பட பல்வேறு தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். 

தாரிகமியை வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதற்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதன்பிறகு உச்சநீதிமன்றத்தின் தலையீட்டால் தாரிகமி காஷ்மீரில் இருந்து சிகிச்சைக்காக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டார். தொடர்ந்து கடந்த செப்டம்பர் 16-ஆம் தேதி தாரிகமி ஸ்ரீநகர் திரும்பவும் உச்சநீதிமன்றம் அனுமதியளித்தது.

இந்நிலையில், சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்தது தொடர்பான விவகாரங்கள் குறித்து அவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். 

இதேபோல் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, குழந்தைகள் உரிமை செயற்பாட்டாளர் எனாக்ஷி கங்குலி, காஷ்மீர் டைம்ஸ் நிர்வாக ஆசிரியர் அனுராதா பாசின், மருத்துவர் சமீர் கௌல் ஆகியோரும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்களோடு இணைத்து தாரிகமி தாக்கல் செய்த மனுவையும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு விசாரிக்கவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com