அம்மாடியோவ்.. அக்டோபர் மாதத்தில் மட்டும் 11 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறையாம்! 

பண்டிகைக் காலம் நெருங்குகிறது. அக்டோபர் மாதம் பிறந்துவிட்டாலே பண்டிகை மாதம்தான். கொண்டாட்ட மாதம்தான்.
அம்மாடியோவ்.. அக்டோபர் மாதத்தில் மட்டும் 11 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறையாம்! 


பண்டிகைக் காலம் நெருங்குகிறது. அக்டோபர் மாதம் பிறந்துவிட்டாலே பண்டிகை மாதம்தான். கொண்டாட்ட மாதம்தான்.

அக்டோபர் மாதத்தில்தான் நவராத்திரி பண்டிகையும், தீபாவளியும் வந்து மக்களை குதூகலப்படுத்துகிறது. ஆனால் இந்த கொண்டாட்டத்துடன், மேலும் சில விஷயங்களையும் நான் கவனிக்க வேண்டியது அவசியமாகிறது.

இந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் வங்கிகள் சுமார் 11 நாட்களுக்கு விடுமுறையில் இருக்கும். அதில் மிகக் குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால் அக்டோபர் 26 முதல் அக்டோபர் 29 வரையில் தொடர்ந்து 4 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட உள்ளது. எனவே இந்த நான்கு நாட்களும் ஏடிஎம்களில் பணம் தீர்ந்து போக வாய்ப்பிருப்பதால் மக்களே உஷாராக இருங்கள் என்கிறது நம் நலம் விரும்பும் பட்சிகள்.

இந்த நான்கு நாட்கள் விடுமுறை தொடர்ந்து வருவதால், பணம் எடுப்பது, லாக்கர்களைப் பயன்படுத்துவது போன்ற வேலைகள் இருந்தால் முன்கூட்டியே செய்து கொள்ளுங்கள். இடர்பாடுகளை தவிருங்கள். வங்கிப் பணிகள் இருந்தால் அதற்கேற்ப திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.

மத்திய அரசால் அறிவிக்கப்படும் விடுமுறைகள் தனியார் மற்றும் பொதுத் துறை வங்கிகளுக்கு பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதே சமயம், விடுமுறை நாள் வேண்டுமென்றால் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடலாம்.

இங்கே அக்டோபர் மாதத்தில் வரும் விடுமுறைப் பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை பட்டியலோடு, நீங்கள் வங்கிக் கணக்கு வைத்திருக்கும் வங்கிகளின் விடுமுறைப் பட்டியல் ஒத்துப் போகிறதா என்பதை பரிசோதித்துக் கொள்ள வேண்டியது உங்கள் கடமை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com