பாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

ஊரடங்கை மதிக்காவிட்டால் எப்.ஐ.ஆர் வீடு தேடி வரும்!

ஊரடங்கை மதிக்காவிட்டால் எப்.ஐ.ஆர் வீடு தேடி வரும் என்று உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர் நகர் காவல்துறை அறிவித்துள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :3 ஏப்ரல் 2020, 11:59 am

முசாபர் நகர்: ஊரடங்கை மதிக்காவிட்டால் எப்.ஐ.ஆர் வீடு தேடி வரும் என்று உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர் நகர் காவல்துறை அறிவித்துள்ளது.

சீனாவில் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலகத்திற்கே அச்சுறுத்தலாக உருமாறியுள்ளது. இதுவரை இந்தியாவில் 2657 பேர் இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 72 பேர் பலியாகியுள்ளனர்.

மேலும் கரோனா பரவுவதைத் தடுக்கும் பொருட்டு கடந்த மாதம் 24-ஆம் தேதி நள்ளிரவு  முதல் வரும் ஏப்ரல் மாதம் 14-ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஊரடங்கை மதிக்காவிட்டால் எப்.ஐ.ஆர் வீடு தேடி வரும் என்று உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர் நகர் காவல்துறை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக முசாபர் நகர் மாவட்ட மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் அபிஷேக் யாதவ் கூறியுள்ளதாவது   

கடந்த ஏழு எட்டு நாட்களாக ஊரடங்கைப் பின்பற்றுங்கள் என்று நாங்கள் தொடர்ந்து கூறி வருகிறோம். ஆனால் உங்களில் சிலர் அதனை மதிக்காமல் தொடர்ந்து வெளியில் சுற்றி வருகிறீர்கள். எனவே இன்மேல் விதிமீறலில் ஈடுபடுபவர்களுக்கு உங்கள் வீடு தேடி எப்.ஐ.ஆர் வரும்.

வெளியில் சுற்றுபவர்களை காவல்துறை புகைப்படம் எடுத்து அதன்மூலமாக் தொடர்புடையவர்களின் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கு எப்.ஐ.ஆர் அனுப்பப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.