புது தில்லி: கரோனா பரிசோதனைக்கு தனியார் பரிசோதனைக் கூடங்கள் அதிகக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், கரோனா பரிசோதனைக்காக செலவாகும் தொகையை மத்திய அரசு திரும்ப வழங்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் யோசனை அளித்துள்ளது.
அரசு மற்றும் தனியார் மருத்துவப் பரிசோதனைக் கூடங்களில் பொதுமக்கள் அனைவருக்கும் இலவசமாக பரிசோதனை செய்ய உத்தரவிடக் கோரிய மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி அஷோக் பூஷண், நாடு பேரிடரை சந்தித்திருக்கும் நிலையில், தனியார் பரிசோதனை மையங்கள், கரோனா பரிசோதனைக்கு அதிகக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளார்.
மேலும், கரோனா பரிசோதனைக்கு ஆகும் செலவை மத்திய அரசு திரும்ப செலுத்துவது குறித்து கருத்துக் கேட்டபோது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், மத்திய அரசிடம் இது பற்றி விளக்கம் பெற்று பதில் அளிப்பதாகக் கூறியுள்ளார்.
காணொலி காட்சி மூலம் நடந்த இந்த விசாரணையின் போது, இந்தியாவில் தற்போது 118 பரிசோதனைக் கூடங்களில் நாள் ஒன்றுக்கு 15 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்யப்படுவதாகவும், 47 தனியார் பரிசோதனை மையங்களும் இந்த பணியில் தற்போது இணைந்திருப்பதாகவும் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி!

உங்கள் முன் ஆஜராக முடியாது! நீதிபதிக்கே கடிதம் எழுதிய கேஜரிவால்!

தஞ்சையில் பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கி மத நல்லிணக்கத்தைப் பறைசாற்றும் கிறிஸ்தவர்கள்- இஸ்லாமியர்கள்!

கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


