ஹைதராபாத்: தெலங்கானாவில் பொது இடங்களில் எச்சில் துப்பத் தடை விதித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
சீனாவில் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலகத்திற்கே அச்சுறுத்தலாக உருமாறியுள்ளது. இதுவரை இந்தியாவில் 5360 பேர் இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 164 பேர் பலியாகியுள்ளனர்.
மேலும் கரோனா பரவுவதைத் தடுக்கும் பொருட்டு கடந்த மாதம் 24-ஆம் தேதி நள்ளிரவு முதல் இந்த மாதம் 14-ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தெலங்கானாவில் பொது இடங்களில் எச்சில் துப்பத் தடை விதித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக மாநில அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘மாநிலத்தில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக, பொது இடங்களில் பான் உள்ளிட்ட எந்த விதமான் புகையிலைப் பொருட்களையும் பயன்படுத்தி விட்டு எச்சில் துப்பத் தடை விதிக்கப்படுகிறது என்றும், மக்களின் நலன் கருதியே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் கரோனா பரவல் போன்ற சூழ்நிலைகள் நமக்கு தனிநபர் சுகாதாரம் மற்றும் பொது இடங்களைத் தூய்மையாக பரமரித்தலின் அவசியத்தை விளக்குவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி!

உங்கள் முன் ஆஜராக முடியாது! நீதிபதிக்கே கடிதம் எழுதிய கேஜரிவால்!

தஞ்சையில் பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கி மத நல்லிணக்கத்தைப் பறைசாற்றும் கிறிஸ்தவர்கள்- இஸ்லாமியர்கள்!

கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


