கரோனாவின் கோரப்பிடியில் அமெரிக்கா: 17 ஆயிரத்தை நெருங்குகிறது பலி எண்ணிக்கை
அமெரிக்காவில் கரோனா நோய்த் தொற்றுக்குப் பலியானோர் எண்ணிக்கை 17 ஆயிரத்தை..


அமெரிக்காவில் கரோனா நோய்த் தொற்றுக்குப் பலியானோர் எண்ணிக்கை 17 ஆயிரத்தை நெருங்குவதாக அந்நாட்டுச் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், சீனாவை மிஞ்சி அமெரிக்காவில் பாதிப்பு அதிகரித்துள்ளது. புதன்கிழமையான நேற்று ஒரே நாளில் மட்டும் 2500 பேருக்கு மேல் உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
கரோனாவின் பிடியில், அமெரிக்கா சிக்கித் தவித்து வருகிறது. நாளுக்கு நாள் பாதிப்பும், பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால், அமெரிக்கா திணறி வருகிறது. சர்வதேச அளவில், கரோனாவால் அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில், அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
வியாழக்கிழமை (ஏப்ரல் 10) நிலவரப்படி..
அமெரிக்காவில் பாதித்தோர் எண்ணிக்கை 4,68,887 ஆக அதிகரித்துள்ளது.
பலியானோர் எண்ணிக்கை 16,997 ஆகும்.
குணமடைந்தோர் எண்ணிக்கை 25,928 ஆக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...