ரிசர்வ் வங்கி அறிவிப்புகள் நாட்டில் பணப்புழக்கத்தை அதிகரிக்கும்: பிரதமர் மோடி ட்வீட்

ரிசர்வ் வங்கி அறிவிப்புகள் நாட்டில் பணப்புழக்கத்தை அதிகரிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். 
ரிசர்வ் வங்கி அறிவிப்புகள் நாட்டில் பணப்புழக்கத்தை அதிகரிக்கும்: பிரதமர் மோடி ட்வீட்
Updated on
1 min read

ரிசர்வ் வங்கி அறிவிப்புகள் நாட்டில் பணப்புழக்கத்தை அதிகரிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். 

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்த பல்வேறு அறிவிப்புகளை இன்று செய்தியாளர்கள் சந்திப்பின்போது வெளியிட்டார். அதில், 2021-22 ஆம் ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதமாக இருக்கும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும், ரெப்போ வட்டி விகிதம், ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம், விவசாயிகளுக்கு கடன் குறித்த பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். 

இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், 'ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்டுள்ள அறிவிப்புகள் நாட்டில் பணப்புழக்கத்தை பெரிதும் மேம்படுத்துவதோடு கடன் வழங்கலை ஊக்குவிக்கும். இதன் மூலமாக சிறு வணிக நிறுவனங்கள், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், விவசாயிகள் மற்றும் ஏழைகள் பயன்பெறுவர். இது அனைத்து மாநிலங்களுக்கும் உதவும்' என்று பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com