

மகாராஷ்டிரத்தில் கரோனா பாதிக்கப்பட்ட 70 முதல் 75 சதவீதம் பேருக்கு வைரஸ் தொற்று அறிகுறிகள் இல்லை என அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.
இன்று காணொலி வாயிலாக செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், 'மகாராஷ்டிரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 70-75% பேருக்கு கரோனா அறிகுறிகள் இல்லை. சுமார் 60,000 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட சூழலில் 3,600 பரிசோதனைகள் நேர்மறையாக உறுதி செய்யப்பட்டுள்ளன. 300க்கும் மேற்பட்டோர் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். தற்போது 52 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.
மனநல பிரச்னைகளை எதிர்கொள்பவர்களுக்கு கட்டணமில்லா அவசர தொலைபேசி எண் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, மனநல ஆலோசனை பெற விரும்புவோர் 1800 120 820050 என்ற எண்ணை அழைக்கவும்.
மகாராஷ்டிரத்தில் படிப்படியாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும். மகாராஷ்டிரத்தில் இருக்கும் வெளிமாநிலத் தொழிலாளர்களுக்குத் தேவையான வசதிகள் செய்து தரப்படும் என்று உறுதியளிக்கிறேன்' என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.