கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,334 பேருக்கு கரோனா உறுதி: மத்திய சுகாதாரத் துறை

கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 1,334 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 1,334 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால் இன்று பிற்பகல் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தபோது கூறியதாவது:

கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 1,334 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 27 இறப்புகள் பதிவாகியுள்ளன. தற்போது 15,712 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு 507 ஆக உள்ளது. மத வழிபாடு இடங்கள் மூடப்படுவதற்காக தடை தொடரும். 

நாளை முதல் மத்திய அரசு வெளியிட்டுள்ள ஊரடங்கு தளர்வுகள் அமலாகவுள்ள நிலையில், கரோனா அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தளர்வுகள் பொருந்தாது. 

கடந்த 14 நாள்களில் 54 மாவட்டங்களில் யாருக்கும் கரோனா பாதிப்பு ஏற்படவில்லை. மொத்தமாக 2,231 பேர் குணமடைந்துள்ளனர்' என்று தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com