

ஆந்திரத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 757 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கரோனா தொற்று பல்வேறு மாநிலங்களில் தீவிரமாகப் பரவி வருகிறது. இதில் ஆந்திரத்தில் மேலும் 35 பேருக்கு இன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக மாநிலத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை இப்போது 757 ஆக அதிகரித்துள்ளது.
மாநில சுகாதாரத்துறை அதிகாரி அர்ஜா ஸ்ரீகாந்த் இத்தகவலை வெளியிட்டுள்ளார். மேலும், ஆந்திரத்தில் 96 பேர் கரோனா தொற்று நோயிலிருந்து மீண்டுள்ளனர் என்றும் இதுவரை 22 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தியாவில் கரோனா பாதிப்பு 18,601 ஆகவும் உயிரிழப்பு 590 ஆகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.