ஜார்க்கண்ட்டில் கரோனாவுக்கு 4-வது நபர் பலி

ஜார்க்கண்ட் மாநிலத்தில் கரோனா நோய்த் தொற்றுக்கு நான்காவது நபர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 
ஜார்க்கண்ட்டில் கரோனாவுக்கு 4-வது நபர் பலி
Updated on
1 min read

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் கரோனா நோய்த் தொற்றுக்கு நான்காவது நபர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

ராஞ்சியின் ஹிந்த்பிரி வட்டாரத்தில் வசித்து வந்த பெண் கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் ராஜேந்திர மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அந்த பெண் செவ்வாய்க்கிழமை காலை 10.45-க்கு மணியளவில் உயிரிழந்தார். கடந்த ஏப்ரல் 12-ம் தேதி பெண்ணின் கணவர் கரோனாவுக்கு பலியானார். 

ஹிந்த்பிரி பகுதியில் 22 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இந்த மாநிலத்தில் கரோனாவுக்கு நான்காவது நபர் பலியான நிலையில், இதுவரை நான்கு பேர் மட்டும் குணமடைந்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com