மகாராஷ்டிரத்தில் ஒரேநாளில் 472 பேருக்கு கரோனா உறுதி

மகாராஷ்டிரத்தில் ஒரேநாளில் 472 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. 
மகாராஷ்டிரத்தில் ஒரேநாளில் 472 பேருக்கு கரோனா உறுதி
Updated on
1 min read

மகாராஷ்டிரத்தில் ஒரேநாளில் 472 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. 

இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில், கரோனா தொற்றால் இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலம் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளது. அங்கு நாளுக்கு நாள் பாதித்தோரின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே இருக்கிறது. 

இந்நிலையில், இன்று புதிதாக 472பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மகாராஷ்டிர மாநில சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது. இதன்மூலம் மாநிலத்தில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 4,676 ஆக உயர்ந்துள்ளது. கடந்த சில வாரங்களில் இன்றைய தினமே மகாராஷ்டிரத்தில் பாதிப்பு அதிகம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. மாநிலத்தில் இதுவரை 232 இறப்புகள் பதிவாகியுள்ளன

இந்தியாவில் கரோனா பாதிப்பு 18,601 ஆகவும் உயிரிழப்பு 590 ஆகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com