இந்தியாவில் கரோனா பாதிப்பில் முதல் இடத்தில் இருப்பது மகாராஷ்டிரம். இந்தியாவில் இன்று காலை நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் 1336 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
47 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன் மூலம், இந்தியாவில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 18,601 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 3252 பேர் குணமடைந்துள்ளனர் என்று மத்திய நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரத்தில் கரோனா பாதிப்பு 4,666 ஆக அதிகரித்துள்ளது; 232 பேர் உயிரிழந்த நிலையில் 572 பேர் குணமடைந்துள்ளனர்
கரோனா தொற்றுப் பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருந்தாலும், கட்டுப்பாடுகளை மீறி, பொதுமக்களில் சிலர் எந்த மனத்தடையும் இல்லாமல் வெளியே சுற்றி வருகிறார்கள்.
அவர்களைத் தடுக்க காவல்துறையினரும் பல்வேறு யுக்திகளைப் பின்பற்றி தண்டனை கொடுத்து வருகிறார்கள். ஆனால் யாரும் திருந்தியதாகத் தெரியவில்லை.
இந்த நிலையில், மகாராஷ்டிர மாநிலம் தாணேவில் காலை வேளையில் வழக்கம் போல நடைப்பயிற்சி மேற்கொண்டவர்களை, காவல்துறையினர் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த வீட்டில் இருக்குமாறு தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வந்தாலும், எந்த சமூக பொறுப்பும் இல்லாமல் இவ்வாறு வெளியே நடமாடியவர்களுக்கு பெண் காவலர் ஒருவர் தட்டில் ஆரத்தி எடுத்து, புத்திமதி சொல்லி அனுப்பினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கடக ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

இன்றைய ராசி பலன்கள் (27 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! துலா ராசிக்கு மன அமைதி!
பொறுப்பால் உயரும் பெருமை!
கடைசிப் பந்து சிக்ஸரால் மாறிய ஆட்டத்தின் போக்கு: சூப்பர் ஓவரில் கொல்கத்தா ‘த்ரில்’ வெற்றி!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


