அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட மருத்துவக் கல்லூரியில் ஒருவருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்ட நிலையில் அங்குள்ள 46 ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அலிகர் பல்கலையுடன் ஒருங்கிணைந்த ஜவாஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரியின் அதிகாரி ஒருவருக்கு கரோனா நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது. அவரை தனிமைப்படுத்துவதற்குப் பதிலாகத் தனது மருத்துவமனையில் உள்ள அவசர பிரிவுக்கு அவரை மாற்றியுள்ளனர். அலட்சியப் போக்கிற்காக கல்லூரி நிர்வாகம் மருத்துவ ஊழியர்களை இடைநீக்கம் செய்துள்ளது.
நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர் சிகிச்சை பலனின்றி கடந்த செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். இதற்காக மாவட்ட அதிகாரிகள் இந்த சம்பவத்திற்குத் தக்க பதில் அளிக்குமாறு கல்லூரி நிர்வாகத்திற்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அலிகர் முஸ்லிம் பல்கலை.யின் மருத்துவமனையின் தலைமை கண்காணிப்பாளர் பேராசிரியர் ஷாஹித் சித்திக் கூறுகையில்,
அங்குள்ள எட்டு மருத்துவர்கள் உட்பட ஊழியர்கள் கவனக்குறைவாக இருந்ததால் கடந்த திங்களன்று அந்த நபருக்கு உடல்நிலை மோசமான நிலைக்குச் சென்றுள்ளது.
முதற்கட்ட பரிசோதனையின் பின்னர் அந்த நபர் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அனுப்பப்பட்டார். அலட்சியம் காரணமாக ஊழியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். உயிரிழந்த நபருடன் இருந்த மருத்துவர் மற்றும் அவரது முழு குடும்பத்தினர் உள்பட 46 பேரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த நபரின் எக்ஸ்ரே அறிக்கை குறித்து மாவட்ட அதிகாரிகளுக்குத் தெரிவிக்காததால் மிட்டல் நோய் கண்டறிதலின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட அதிகாரி நீத்வான் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!

கடக ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

இன்றைய ராசி பலன்கள் (27 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! துலா ராசிக்கு மன அமைதி!
பொறுப்பால் உயரும் பெருமை!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


