

புது தில்லி: அடையாள போராட்டத்தைக் கைவிடுங்கள், மத்திய அரசு உங்களுடன் இருக்கிறது என்று மருத்துவர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கோரிக்கை வைத்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் இன்று காணொலி காட்சி மூலம் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய நல்வாழ்வுத் துறை அமைச்சர் மருத்துவர் ஹர்ஷ வர்த்தனும் பங்கேற்றிருந்தார்.
இந்திய மருத்துவச் சங்கத்தின் மருத்துவப் பிரதிநிதிகளிடம் காணொலி காட்சி மூலம் அமித் ஷா பேசினார். அப்போது, மருத்துவர்களின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்யும். எனவே மருத்துவர்கள் முன்னதாக அறிவித்தபடி அடையாள போராட்டம் நடத்த வேண்டாம், மத்திய அரசு உங்களுடன் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.