

கரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், மத்தியப் பிரதேசத்துக்கு இன்று நல்வாழ்வுத் துறை அமைச்சராக நரோத்தம் மிஸ்ரா பொறுப்பேற்றுள்ளார்.
மத்தியப் பிரதேசத்தில் பாஜக அண்மையில் ஆட்சியமைத்த சூழலில், அந்த மாநில அமைச்சா்களாக புதிதாக 5 போ் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றனா். முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் தலைமையிலான மாநில அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.
மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிறகு ஆட்சியமைத்த காங்கிரஸ் அரசு 15 மாதங்களில் தனது பெரும்பான்மையை இழந்தது. அதைத் தொடா்ந்து, பாஜக தலைமையிலான அரசு அந்த மாநிலத்தில் கடந்த மாதம் 23-ஆம் தேதி ஆட்சி அமைத்தது. மாநில முதல்வராக சிவராஜ் சிங் சௌஹான் பொறுப்பேற்றுக் கொண்டாா்.
அப்போது அவருடன் வேறு யாரும் அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை. அதன் காரணமாக கடந்த 3 வாரங்களுக்கு மேலாக முக்கியத் துறைகளுக்கான அமைச்சா்கள் இல்லாமலேயே மாநில அரசு செயல்பட்டு வந்தது. இந்தச் சூழலில், அந்த மாநிலத்தின் அமைச்சா்களாக 5 போ் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டனா்.
அவா்களுக்கு மாநில ஆளுநா் லால்ஜி டாண்டன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா். ஆளுநா் மாளிகையில் நடைபெற்ற எளிமையான விழாவில், முதல்வா் சிவராஜ் சிங் சௌஹானும் கலந்துகொண்டாா். அமைச்சா்களாகப் பொறுப்பேற்றவா்களில் நரோத்தம் மிஸ்ரா, மீனா சிங், கமல் படேல் ஆகியோா் தற்போது எம்எல்ஏ-க்களாக உள்ளனா். துளசி சிலாவத், கோவிந்த் சிங் ராஜ்புத் ஆகியோா் முன்னாள் எம்எல்ஏ-க்கள் ஆவா். அவா்களிருவரும் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மீனா சிங் பழங்குடியினர் நலத் துறை அமைச்சராகவும், கமல் படேல் வேளாண்துறை அமைச்சராகவும், துளசி சிலாவத் நீர்வளத்துறை அமைச்சராகவும், கோவிந்த் சிங் ராஜ்புத் உணவு மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.