வடகிழக்கு மாநிலங்களில் கரோனாவின் தற்போதைய நிலை

இந்தியாவில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 21,393- ஆக உயா்ந்துள்ள நிலையில், கரோனா பாதித்து உயிரிழந்தோா் எண்ணிக்கை 681-ஆக அதிகரித்துள்ளது.
வடகிழக்கு மாநிலங்களில் கரோனாவின் தற்போதைய நிலை
Updated on
1 min read

இந்தியாவில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 21,393- ஆக உயா்ந்துள்ள நிலையில், கரோனா பாதித்து உயிரிழந்தோா் எண்ணிக்கை 681-ஆக அதிகரித்துள்ளது.

எனினும், வடகிழக்கு மாநிலங்களில் கரோனா தொற்று பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. வடகிழக்கு மாநிலங்களில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை இங்குப் பார்க்கலாம்.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒட்டுமொத்தமாக 54 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதில், 

அஸ்ஸாம் - 35
மேகாலயம் - 12
மணிப்பூர் - 2
திரிபுரா - 2
அருணாசலம் - 1
மிசோரம் - 1
நாகாலாந்து - 1

அஸ்ஸாம் மற்றும் மேகாலயத்தில் தலா ஒருவர் மரணம் அடைந்துள்ளனர். மேகாலயத்தில மரணம் அடைந்தவர் மருத்துவர் ஆவார். ஒட்டுமொத்தமாக குணமடைந்தவர்கள் 22 பேர். (அஸ்ஸாமில் 19, மணிப்பூரில் இருவர், திரிபுராவில் ஒருவரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். 

முன்னதாக, மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, வியாழக்கிழமை காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 1,409 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 21,393 -ஆக உயர்ந்துள்ளது. இதுவரை நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த 681 பேர் உயிரிழந்துள்ளனா். இதுவரை 4258 பேர் குணமடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com