தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை! மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!பாகிஸ்தானின் மிகப்பெரிய மருத்துவமனையில் தீ! 15 பச்சிளம் குழந்தைகள் பலி! மோகன் பாகவத்தின் நியூயார்க் நிகழ்வுக்கு மேயர் மம்தானி எதிர்ப்பு!மலையாளச் சொந்தங்களுக்கு இதயங்கனிந்த ஓணம் வாழ்த்துகள்! முதல்வர் விஜய்‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்: மனமார்ந்த ஓணம் வாழ்த்துக்கள்!’ - மு.க.ஸ்டாலின்குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

ஒவ்வொரு இந்தியக் குடும்பத்துக்கும் ரூ.7,500 இழப்பீடு: சோனியா வலியுறுத்தல்

கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில், பாஜக அரசுக்கு சொன்ன

கோப்புப்படம்

Published On :27 ஜனவரி 2024, 10:00 pm IST


புது தில்லி: ஊரடங்கால் ஏற்பட்ட பொருளாதார இழப்பை சரிகட்ட ஒவ்வொரு இந்தியக் குடும்பத்துக்கும் மத்திய அரசு ரூ.7,500ஐ இழப்பீடாக அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார்.

கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில், பாஜக அரசுக்கு சொன்ன யோசனைகள் எதுவும் ஏற்கப்படவில்லை என்றும்  சோனியா குற்றம்சாட்டியுள்ளார்.

புது தில்லியில் இன்று சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் அவர் இவ்வாறு கூறினார்.

மேலும் அவர் பேசுகையில், நான் இப்போது உங்களுக்கு பகிரவிருக்கும் ஒரு தகவல் ஒவ்வொரு இந்தியரும் கவலைப்பட வேண்டிய விஷயமாக உள்ளது. கரோனா தொற்றை நாம் ஒன்றிணைந்து போராட வேண்டிய இந்த சூழ்நிலையிலும் கூட, பாஜக அரசு, தொடர்ந்து வெறுப்புணர்வு, சமுதாயத்தில் பிளவு எனும் தொற்றுகளைப் பரப்பி வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

சமூக ஒற்றுமையை மத்திய அரசு சிதைத்து வருகிறது. அதே சமயம், காங்கிரஸ் கட்சி அதனை சீராக்க தொடர்ந்து கடுமையாகப் போராடி வருகிறது என்றும் கூறினார்.

ஊரடங்கு உத்தரவால் சுமார் 12 கோடி பேர் வேலை வாய்ப்பை இழந்து, வாழ்வாதாரத்தை இழந்து, பொருளாதாரப் பின்னடைவை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த மோசமான சூழ்நிலையைக் கையாள ஒவ்வொரு இந்தியக் குடும்பத்துக்கும் மத்திய அரசு ரூ.7,500ஐ இழப்பீடாக அளிக்க வேண்டும் என்று சோனியா வலியுறுத்தியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.