கேரளத்தில் கரோனாவுக்கு 4 மாத குழந்தை பலி 

கேரள மாநிலத்தில் கரோனா தொற்று பாதிக்கப்பட்ட நான்கு மாத பெண் குழந்தை
கேரளத்தில் கரோனாவுக்கு 4 மாத குழந்தை பலி 
Updated on
1 min read

கோழிக்கோடு: கேரள மாநிலத்தில் கரோனா தொற்று பாதிக்கப்பட்ட நான்கு மாத பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த ஏப்ரல் 17 முதல் 21 வரை மலப்புரம் மாவட்டம் மஞ்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நான்கு மாத பெண் குழந்தை சிகிச்சை பெற்று வந்தது. பின்னர், செவ்வாய்க்கிழமை அதிகாலை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டபோது குழந்தைக்குச் சுவாச கோளாறு மற்றும் பிற பிரச்னைகள் ஏற்பட்டன. 

குழந்தைக்கு கரோனா பரிசோதனை செய்கையில் புதன்கிழமையன்று கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. குழந்தையின் தொலை தூரத்தில் உள்ள உறவினருக்கு கரோனா பாதிப்பு இருந்துள்ளது. ஆனால், குழந்தையின் குடும்பத்தினருடன் எந்த தொடர்பும் இல்லை என்று பெற்றோர்கள் தெரிவித்தனர். 

குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்து வென்டிலேட்டர் மூலம் சுவாசித்து வந்தது. மேலும், குழந்தைக்கு ஏற்கெனவே ஒருசில பிரச்னை இருந்ததாகவும் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாநில உயர் கல்வி அமைச்சர் கே.டி.ஜலீல் இதை உறுதிப்படுத்தினார். ஆனால் சிகிச்சை பலனின்றி குழந்தை இன்று உயிரிழந்தது என்று அவர் தெரிவித்தார்.

இதன் மூலம் அந்த மாநிலத்தில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com