

ஆந்திரத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 955 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கரோனா தொற்று பல்வேறு மாநிலங்களில் தீவிரமாகப் பரவி வருகிறது. இதில், ஆந்திரத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்குகிறது. இன்று மேலும் 62 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலமாக மாநிலத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை தற்போது 955 ஆக அதிகரித்துள்ளது.
மாநில சுகாதாரத்துறை அதிகாரி அர்ஜா ஸ்ரீகாந்த் இத்தகவலை வெளியிட்டுள்ளார். மேலும், ஆந்திரத்தில் 145 பேர் கரோனா தொற்று நோயிலிருந்து மீண்டுள்ளனர் என்றும் இதுவரை 29 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தியாவில் கரோனா பாதிப்பு 23,077 ஆகவும் உயிரிழப்பு 718 ஆகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.