

தில்லியில் கரோனா பரவல் சற்று குறைந்துள்ளது என்று முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களிடம் பேசிய கேஜரிவால், 'தில்லியில் கரோனா பரவலைத் தடுக்க அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தில்லியில் மே 3 வரை ஊரடங்கில் எந்தத் தளர்வும் இல்லை. அத்தியாவசியப் பணிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மிகவும் கடினமான காலத்தை கடந்து வருகிறோம். தில்லியில் கரோனா பரவலைத் தடுக்க தொடர்ந்து முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. கரோனா எந்த மதத்திற்கும் பாகுபாடு காட்டாது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். ஒரு இந்து நோயாளிக்கு சிகிச்சையளிக்க முஸ்லிம் நபரின் பிளாஸ்மா பயன்படலாம். கரோனாவில் இருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன்வர வேண்டும் என்று தெரிவித்தார்.
தில்லியில் கரோனா பாதிப்பு 2,625 ஆகவும் இறப்பு எண்ணிக்கை 54 ஆகவும் உள்ளது. 869 பேர் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.