கரோனாவுக்கு எதிரான மக்களின் போர் நிச்சயம் வெற்றி பெறும்: பிரதமர் மோடி உரை

கரோனாவுக்கு எதிரான மக்களின் இந்த போர் நிச்சயம் வெற்றி பெறும் என்று மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். 
கரோனாவுக்கு எதிரான மக்களின் போர் நிச்சயம் வெற்றி பெறும்: பிரதமர் மோடி உரை
Updated on
1 min read

கரோனாவுக்கு எதிரான மக்களின் இந்த போர் நிச்சயம் வெற்றி பெறும் என்று மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். 

பிரதமா் மோடி, ‘மனதின் குரல்’ என்ற வானொலி நிகழ்ச்சி மூலம் மாதந்தோறும் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறாா். அதன்படி, இன்று (ஞாயிற்றுக்கிழமை) அவர் ஆற்றிய உரையில் கூறியிருப்பதாவது:

இந்தியாவில் கரோனாவுக்கு எதிரான போரை மக்கள் முன்னெடுத்து வருகின்றனர். கரோனாவுக்கு எதிரான மக்களின் இந்த போர் நிச்சயம் வெற்றி பெறும். கரோனாவுக்கு எதிரான போர்க்களத்தில் ஒவ்வொரு குடிமகனும் முன்னணி வீரர்கள். ஒவ்வொருவரும் தங்கள் திறனுக்கு ஏற்ப இந்தப் போரை எதிர்கொள்கிறனர். இந்த நாட்டில் யாரும் பசியுடன் இல்லை என்பதை விவசாயிகள் உறுதி செய்கிறார்கள். சிலர் வீட்டு வாடகையைத் தள்ளுபடி செய்கிறார்கள். ஒரு பள்ளியில் தனிமைப்படுத்தப்பட்ட சில தொழிலாளர்கள் பள்ளிக்கு வர்ணம் பூசுவதால் ஈடுபடுகின்றனர். 

மக்களின் உந்துதலே போராட்டத்திற்கு காரணம். இந்த போராட்டத்தில் மக்களுடன் அரசும் இணைந்திருக்கிறது. ஒரு சிறந்த வீரராக ஒவ்வொரு குடிமகனும் இந்த போரை எதிர்த்துப் போரிடுகிறான் என்று பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com