நியூ யார்க்: கரோனா தொற்று பற்றிய தவறான தகவல்களை பரப்புவதில் சமூக வலைத்தளங்கள் முன்னிலையில் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்த ஆய்வு முடிவுகள் ஹார்வர்ட் கென்னடி ஸ்கூல் மிஸ்இன்ஃபர்மேஷன் ரிவ்யூ என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது.
கரோனா தொற்று பற்றி அறிந்தது மிகவும் குறைவு, அது பற்றி அறியாத தகவல்கள்தான் அதிகம் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் அது பற்றி தவறான தகவல்கள் பொதுமக்களுக்கு நேரடியாக சென்று சேர்ந்து விடுகிறது சமூக வலைத்தளங்கள் மூலமாக.
கரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு தவறான தகவல்கள் சமூக வலைத்தளங்கள் மூலமாகப் பரப்பப்படுவதாகவும் கூறப்படுகிறது.
எடுக்கப்பட்ட ஆய்வில், 23% பேர், சீனாவின் ஆய்வகத்தில் இருந்துதான் கரோனா தொற்று பரவியது என்றுதான் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். (இதுவரை இந்த தகவல் உறுதி செய்யப்படவில்லை.)
அதேப்போல 21% பேர் விட்டமின் சி எடுத்துக் கொண்டால், நிச்சயம் கரோனா தொற்றில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்றும் நம்புகிறார்கள். (ஆனால், அது உண்மையில்லை.)
அதாவது, ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை மட்டும் பார்க்கும் மக்கள் இதுபோன்ற தகவல்களை நம்புவதாகவும், கூகுள் செய்தி போன்ற செய்தித் தளங்களைப் படிப்பவர்கள் கைக் கழுவுதல், சமூக இடைவெளி போன்றவைதான் கரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வழி என்று தெரிந்து வைத்திருப்பதாகவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
மக்களுக்கு உண்மையான தகவல்கள் தெரிய வேண்டியது எவ்வளவு முக்கியமோ, அதுபோலவே தவறான தகவல்கள் சென்றடைவதைத் தடுக்க வேண்டியதும் அவசியம் என்று சரியான மற்றும் தவறான தகவல்களை ஒருவர் தெரிந்து கொள்வது, அவரது வாழ்க்கை முறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!

கடக ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

இன்றைய ராசி பலன்கள் (27 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! துலா ராசிக்கு மன அமைதி!
பொறுப்பால் உயரும் பெருமை!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


