கான்பூரில் பெண் பத்திரிகையாளருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உன்னாவ்-கான்பூர் எல்லைக்கு அருகிலுள்ள கங்கா காட் பகுதியில் உள்ள மத்னி நகரில் வசிக்கும் பத்திரிகையாளர் ஞாயிற்றுக்கிழமை இரவு கான்பூரில் உள்ள பிரத்யேக கரோனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பத்திரிகையாளரின் குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரும் கான்பூருக்கு அழைத்துச் செல்லப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களின் இரத்த மாதிரிகள் சோதனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர்.
கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு கடுமையான ஜுரம் காரணமாகப் பெண் பத்திரிகையாளர் கான்பூர் மருத்துவக் கல்லூரிக்குச் சோதனைக்குச் சென்றிருந்தார்.
பின்னர் அவரது இரத்த மாதிரிகள் வெள்ளிக்கிழமை எடுக்கப்பட்டன. அவருக்கு கரோனா தொற்று சாதகமாக இருப்பது கண்டறியப்பட்டது. தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!

கடக ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

இன்றைய ராசி பலன்கள் (27 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! துலா ராசிக்கு மன அமைதி!
பொறுப்பால் உயரும் பெருமை!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


