
கேரள அரசு ஊழியர்களுக்கு 1 மாத ஊதியம் பிடித்தம் செய்யப்படுவது தொடர்பான உத்தரவை 2 மாதங்களுக்கு நிறுத்தி வைத்து கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு காரணமாக பல்வேறு தொழில் நிறுவனங்கள் இழப்பைச் சந்தித்துள்ளன. பொருளாதாரம் மிகப் பெரிய பின்னடைவைச் சந்தித்துள்ளது. இந்த நிதி நெருக்கடிகளை சமாளிப்பதற்காக அரசு ஊழியர்களுக்கான 1 மாத ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என கேரள அரசு அறிவித்தது. இது மாதத் தவணைகளாக அடுத்த 5 மாதங்களுக்குப் பிடித்தம் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து கேரள அரசின் இந்த அறிவிப்புக்கு எதிராக காங்கிரஸ் தலைமையிலான பல்வேறு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம் ஊதிய பிடித்தம் தொடர்பான அரசின் உத்தரவை 2 மாதங்களுக்கு நிறுத்தி வைப்பதாக உத்தரவிட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு கேரள அரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.