இந்தியாவில் கரோனா பாதிப்பு 31,787; பலி 1,008 ஆக உயர்வு

இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 31,332-இல் இருந்து 31,787 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கரோனா பாதிப்பு 31,787; பலி 1,008 ஆக உயர்வு
Updated on
1 min read


இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 31,332-இல் இருந்து 31,787 ஆக அதிகரித்துள்ளது. மேலும் வைரஸ் தொற்றுக்கு உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 1,007 -இல் இருந்து 1,008 ஆக உயர்ந்துள்ளது.

குணமடைந்தோரின் எண்ணிக்கை 7,696-இல் இருந்து 7,797 ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இதில், அதிகம் பாதிப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரம் முதலிடத்தில் உள்ளது. இங்கு பாதிப்பு 9,318 ஆக உள்ளது. அதிகபட்சமாக 400 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

குஜராத்தில் 3,774 பேரும், தில்லியில் 3,314 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 2,387 பேரும், ராஜஸ்தானில் 2,364 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 2,115 பேரும், ஆந்திரத்தில் 1,332 பேரும், தெலங்கானாவில் 1,012 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் பாதிப்பு 2 ஆயிரத்தைத் தாண்டி 2,058 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com