வெளிமாநில தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அழைத்துச் செல்ல அனுமதி: மத்திய அரசு

வெளிமாநில தொழிலாளர்களை அவர்களது சொந்த ஊர்களுக்கு அழைத்துச் செல்ல அனுமதி அளிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
19walk_1904chn_175_1
19walk_1904chn_175_1
Updated on
1 min read


புது தில்லி: வெளிமாநில தொழிலாளர்களை அவர்களது சொந்த ஊர்களுக்கு அழைத்துச் செல்ல அனுமதி அளிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வெளி மாநிலங்களில் தங்கியிருக்கும் தங்களது மாநில மக்களை அழைத்துக் கொள்ள மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. எனவே, வெளி மாநிலங்களில் தங்கியிருக்கும் தொழிலாளர்கள், சுற்றுலாப் பயணிகள், மாணவர்களை உரிய அறிவுறுத்தல்களுடன் சொந்த மாநில அரசு அழைத்துக் கொள்ளலாம்.

தொழிலாளர்கள் தங்கியிருக்கும் மாநிலங்கள் மற்றும், அவர்களது சொந்த மாநிலங்கள் என இரு மாநிலங்களுக்கும் ஒருமித்த கருத்து ஏற்பட்டால் மட்டும், திரும்ப அழைத்துக் கொள்ளும் நடைமுறை பின்பற்றப்படும் என்றும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சொந்த ஊர்களுக்குத் திரும்பியவர்களை உரிய முறையில் தனிமைப்படுத்தப்படுவதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என்றும், தொழிலாளர்களை திரும்ப அழைத்துக் கொள்வதை கவனிக்க சிறப்பு அதிகாரிகளை நிர்வகித்து பணிகளை மேற்கொள்ளலாம் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com