கர்நாடகத்தில் புதிதாக 22 பேருக்கு கரோனா உறுதி

கர்நாடகத்தில் புதிதாக 22 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 557 ஆக உயர்ந்துள்ளது.
கர்நாடகத்தில் புதிதாக 22 பேருக்கு கரோனா உறுதி
Updated on
1 min read

கர்நாடகத்தில் புதிதாக 22 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 557 ஆக உயர்ந்துள்ளது.

ஏப்ரல் 29 மாலை 5 மணி முதல் ஏப்ரல் 30 பகல் 12 மணி வரையிலும் புதிதாக 22 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

இதனால் மாநிலத்தில் தற்போது பாதிப்பு எண்ணிக்கை 557 ஆக உயர்ந்துள்ளது. இதில் 21 பேர் பலியாகியுள்ளனர், 223 பேர் கரோனாசிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 

இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 33,050 ஆகவும், பலி எண்ணிக்கை 1,074 ஆகவும் அதிகரித்துள்ளது. இதுவரை 8,325 பேர் குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com