ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ஹிந்துஸ்தான் கப்பல் கட்டும் தளத்தில் கிரேன் சரிந்து விழுந்ததில் 10 தொழிலாளர்கள் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.
இந்த விபத்தில் படுகாயமடைந்த தொழிலாளர்கள் பலர் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் உயிர் பலி அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
கப்பல் கட்டுமானப் பணியின் போது எதிர்பாராத விதமாக ராட்சத கிரேன் சரிந்து, அப்பகுதியில் பணியாற்றிக் கொண்டிருந்த ஏராளமான தொழிலாளர்கள் மீது விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே 10 தொழிலாளர்கள் உடல் நசுங்கி பலியானதாகவும், பலர் படுகாயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உடனடியாக விரைந்து வந்த மீட்புக் குழுவினரும், காவல்துறையினரும் சம்பவ இடத்தில் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
முதற்கட்ட விசாரணையில், அந்த கிரேன் புதிதாகக் கொண்டு வரப்பட்டதாகவும், அதனை பொறுத்தும் போது விபத்து நேரிட்டதாகவும் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திண்டிவனம்: அரசுப் பேருந்து மீது லாரி மோதல்! ஒருவர் பலி; 40 பேர் காயம்!
கொடைக்கானலில் சைக்கிள் ஓட்டிய முதல்வர் ஸ்டாலின்!

அடுத்த 3 மணி நேரத்துக்கு 4 மாவட்டங்களில் மழை!
சிறுவர்களுடன் கால்பந்து விளையாடிய மோடி!
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


