தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

செலவு மிக்கதாகிவிட்ட நீதி: வெங்கய்ய நாயுடு பேச்சு

உச்ச நீதிமன்றம் உள்பட நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் வழக்குகள் குறித்து குரல் கொடுத்திருக்கும் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, நீதி தாமதம் இன்றி விரைவாகக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

News image
செலவு மிக்கதாகிவிட்ட நீதி: வெங்கய்ய நாயுடு பேச்சு
Updated On :4 ஆகஸ்ட் 2020, 10:30 am

DIN


புது தில்லி: உச்ச நீதிமன்றம் உள்பட நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் வழக்குகள் குறித்து குரல் கொடுத்திருக்கும் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, நீதி தாமதம் இன்றி விரைவாகக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

நீதி தாமதமின்றி விரைவாகக் கிடைக்க அரசுகளும், சட்டத்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள வெங்கய்ய நாயுடு, நீதி விரைவாகவும் ஏழை எளிய மக்களால் அணுகக் கூடியதகாவும் இருக்க வேண்டும் என்பதை அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிட்டுள்ளார்.

வழக்குகள் ஒத்திவைக்கப்படுவது அதிகரித்திருப்பது குறித்து குறிப்பிட்டிருக்கும் வெங்கய்ய நாயுடு, நீதி என்பது செலவு மிக்கதாகிவிட்டது என்றும் தெரிவித்துள்ளார்.

ஆந்திர பல்கலையின் கீழ் இயங்கும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் சட்டக் கல்லூரியின் ஆண்டு விழாவில் காணொலி காட்சி மூலம் பங்கேற்று குடியரசு துணைத் தலைவர் உரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், பொது நலன் வழக்குகள் எப்போதுமே தனிநபர் நலன்காக்கும் வழக்குகளாக மாறிவிடக் கூடாது. பொது நலன் வழக்குகள் தனிநபர் மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்டவர்களுக்கானதாக மாறியும் விடக்கூடாது. 

சட்டக் கல்லூரி மாணவர்கள், குரல் இல்லாதவர்களின் குரலாக இருக்கவும், சாதாரண மக்களின் நலன் காக்க தங்களது சட்ட அறிவைப் பயன்படுத்தவும், ஏழைகளுக்கு நீதி கிடைப்பதற்கு உதவுமாறும் வெங்கய்ய நாயுடு கேட்டுக் கொண்டார்.

தங்களது கடமையை ஆற்றும் போது அச்சமின்றி, நேர்மைக்காக பாடுபட வேண்டும் என்றும், அநீதி எங்கு நிகழ்ந்தாலும் அதைத் தட்டிக்கேட்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். சட்டத்தின் நோக்கமும், பயனும் மிகவும் தெளிவாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.