காங்கிரஸில் பிஎஸ்பி எம்எல்ஏ-க்கள்: பேரவைத் தலைவருக்கு ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

​6 பகுஜன் சமாஜ்  எம்எல்ஏ-க்களும் காங்கிரஸில் இணைந்தது தொடர்பாக பாஜக எம்எல்ஏ மற்றும் பிஎஸ்பி தேசியச் செயலர் தொடர்ந்த வழக்கில் பேரவைத் தலைவருக்கு ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பேரவைத் தலைவர்
பேரவைத் தலைவர்


6 பகுஜன் சமாஜ் (பிஎஸ்பி) எம்எல்ஏ-க்களும் காங்கிரஸில் இணைந்தது தொடர்பாக பாஜக எம்எல்ஏ மற்றும் பிஎஸ்பி தேசியச் செயலர் தொடர்ந்த வழக்கில் பேரவைத் தலைவருக்கு ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்த வழக்கு வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

6 பகுஜன் சமாஜ் எம்எல்ஏ-க்களும் காங்கிரஸ் எம்எல்ஏ-க்களாக செயல்படுவதற்குத் தடை விதிக்க ஒற்றை நீதிபதி அடங்கிய அமர்வு மறுப்பு தெரிவித்தது. இந்த உத்தரவை எதிர்த்து, பாஜக எம்எல்ஏ மதன் தில்வார் மற்றும் பிஎஸ்பி தேசியச் செயலர் சதிஷ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய 2 நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரஜித் மஹந்தி மற்றும் நீதிபதி பிரகாஷ் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, பேரவைத் தலைவருக்கு நோட்டீஸ் அனுப்பப்ட்டது.

முன்னதாக, 6 பகுஜன் சமாஜ் எம்எல்ஏ-க்களும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தது தொடர்பாக செப்டம்பர் 2019-இல் பேரவைத் தலைவர் எடுத்த முடிவை எதிர்த்து இருவரும் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இதை விசாரித்த ஒற்றை நீதிபதி அமர்வு, பேரவைத் தலைவர், பேரவைச் செயலர் மற்றும் 6 எம்எல்ஏ-க்களும் ஆகஸ்ட் 11-ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு கடந்த 30-ம் தேதி உத்தரவிட்டது. எனினும், இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை.

விவரம்:

ராஜஸ்தானில் துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் மற்றும் முதல்வர் அசோக் கெலாட் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இதன் காரணமாக, பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் அசோக் கெலாட் விரும்புகிறார். ஆகஸ்ட் 14-ம் தேதி பேரவைக் கூடவுள்ள நிலையில், பிஎஸ்பி எம்எல்ஏ-க்கள் வழக்கு தொடர்பான விசாரணைகள் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com