தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ஆந்திரத்தில் ஜனநாயகத்தைக் காக்கவே சந்திரபாபு நாயுடு நடவடிக்கை: தெலுங்கு தேசம்

​ஆந்திரத்தில் ஜனநாயகத்தையும், பொதுமக்களின் உரிமைகளையும் பாதுகாப்பதற்கான நடவடிக்கையை சந்திரபாபு நாயுடு மேற்கொண்டிருப்பதாக தெலுங்கு தேசம் செய்தித் தொடர்பாளர் ஜிவி ராமகிருஷ்ண பிரசாத் தெரிவித்துள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :17 ஆகஸ்ட் 2020, 11:52 am

DIN


ஆந்திரத்தில் ஜனநாயகத்தையும், பொதுமக்களின் உரிமைகளையும் பாதுகாப்பதற்கான நடவடிக்கையை தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு மேற்கொண்டிருப்பதாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜிவி ராமகிருஷ்ண பிரசாத் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி ராமகிருஷ்ண பிரசாத் தெரிவித்ததாவது:

"ஆந்திரத்தில் ஜனநாயகத்தையும், பொதுமக்களின் உரிமைகளையும் பாதுகாப்பதற்கான நடவடிக்கையை சந்திரபாபு நாயுடு மேற்கொண்டுள்ளார். எதிர்க்கட்சிகள் மற்றும் பிற முக்கியத்துவம் வாய்ந்த நபர்களின் தொலைபேசி உரையாடல்களை மாநில அரசு ஒட்டு கேட்கிறது. பேச்சுரிமை என்பது குடிமக்களின் அடிப்படை உரிமையாகும். ஆனால், மாநில அரசு நீதிமன்றத்தின் உத்தரவுகளையும் மீறுகிறது. தொலைபேசி உரையாடல்கள் நீண்ட நாள்களாக ஒட்டு கேட்கப்படுகிறது." என்றார் அவர்.

முன்னதாக, எதிர்க்கட்சித் தலைவர்கள், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோரின் தொலைபேசி உரையாடல்களை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அரசு ஒட்டு கேட்பதாக குற்றம்சாட்டி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார் சந்திரபாபு நாயுடு. அந்தக் கடிதத்தில் இவ்விவகாரம் பற்றி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் சந்திரபாபு நாயுடு குறிப்பிட்டிருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.