தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

365 வழக்குகளில் உதவிய நாய்க்கு இறுதி மரியாதை செய்த காவல்துறையினர்

மகாராஷ்டிராவில்  365 வழக்குகளில் காவல்துறைக்கு உதவிய மோப்பநாய் ராக்கி மறைந்ததையடுத்து மும்பை காவல்துறையினர் அவற்றுக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.

News image
உயிரிழந்த நாய் ராக்கி
Updated On :17 ஆகஸ்ட் 2020, 9:52 am

DIN

மகாராஷ்டிராவில்  365 வழக்குகளில் காவல்துறைக்கு உதவிய மோப்பநாய் ராக்கி மறைந்ததையடுத்து மும்பை காவல்துறையினர் அவற்றுக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.

போதைப்பொருள் மற்றும் வெடிபொருட்களைத் தேடுவது, ஆதாரங்களைக் கண்டுபிடிப்பது போன்ற பல்வேறு சேவைகளுக்கு காவல்துறை மற்றும் பிற சட்ட அமலாக்கப் பணியாளர்களுக்கு உதவ சில நாய்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

மகாராஷ்டிர மாநில காவல்துறையில் மோப்ப நாயாக பணியாற்றி வந்த நாய் ராக்கி. கிட்டத்தட்ட 365 வழக்குகளில் தடயங்களை கண்டுபிடிக்க காவல்துறைக்கு உதவியுள்ளது. இந்நிலையில் மும்பை காவல்துறையில் பணியாற்றிய ராக்கி ஞாயிற்றுக்கிழமை மாலை உடல்நலக்குறைவால் உயிரிழந்தது. மும்பை காவல்துறையில் பல்வேறு வழக்குகளில் மோப்பநாயாக பணியாற்றிய ராக்கி காவலர்களின் நண்பனாகவும் பழகி வந்தது.

தொடர்ந்து ராக்கி மறைந்ததையடுத்து அதனை வளர்த்து வந்த காவலர்கள் சோகத்தில் மூழ்கினர். தொடர்ந்து ராக்கிக்கான இறுதி மரியாதை நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் பல்வேறு காவலர்களும் கலந்து கொண்டு ராக்கிக்கு அஞ்சலி செலுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.