மேகாலயத்தின் புதிய ஆளுநராக சத்யபால் மல்லிக் நியமனம்

மேகாலயத்தின் ஆளுநர் ததாகத ராய்க்கு பதிலாக கோவா ஆளுநராக இருந்த சத்ய பால் மல்லிக் மேகாலயாவின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேகாலயத்தின் புதிய ஆளுநராக சத்யபால் மல்லிக் நியமனம்
மேகாலயத்தின் புதிய ஆளுநராக சத்யபால் மல்லிக் நியமனம்
Published on
Updated on
1 min read

மேகாலயத்தின் ஆளுநர் ததாகத ராய்க்கு பதிலாக கோவா ஆளுநராக இருந்த சத்ய பால் மல்லிக் மேகாலயாவின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான அறிவிப்பை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ளார். மேலும் கோவாவின் நிர்வாகப் பொறுப்பை மகாராஷ்டிர மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி கூடுதலாக கவனித்துக் கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநில ஆளுநராக மல்லிக் 2018 ஆகஸ்ட் முதல் 2019 அக்டோபர் வரை பணியாற்றியுள்ளார். ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட உடனேயே அவர் கடந்த ஆண்டு அக்டோபரில் கோவா ஆளுநராக நியமிக்கப்பட்டார். 

கோவாவில் புதிய ராஜ்பவனைக் கட்டுவதற்கான மாநில அரசாங்கத்தின் திட்டத்தை எதிர்த்த மாலிக் மாநிலத்தின் நிதி நிலை மேம்படும் வரை கட்டுமானத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கூறியிருந்தது சர்ச்சையை எழுப்பியது.

மல்லிக்கின் அரசியல் பயணமானது 1965 ஆம் ஆண்டில் தொடங்கி முதன்முதலில் 1980 இல்  மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1986 ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சி சார்பாக மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர் தன்னை பாரதிய ஜனதா கட்சியில் இணைத்துக் கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com