தலா 1 லட்சம் பணமதிப்பு கொண்ட 1 கோடி கிசான் அட்டைகளுக்கு அனுமதி

கரோனா பொது முடக்கம் காரணமாக பெரும் பின்னடைவை சந்தித்திருக்கும் விவசாயகத்தை முன்னெடுக்கும் வகையில், தலா ஒரு லட்சம் பணமதிப்பு கொண்ட ஒரு கோடி கிசான் அட்டைகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
தலா 1 லட்சம் பணமதிப்பு கொண்ட 1 கோடி கிசான் அட்டைகளுக்கு அனுமதி
தலா 1 லட்சம் பணமதிப்பு கொண்ட 1 கோடி கிசான் அட்டைகளுக்கு அனுமதி

புது தில்லி: கரோனா பொது முடக்கம் காரணமாக பெரும் பின்னடைவை சந்தித்திருக்கும் விவசாயகத்தை முன்னெடுக்கும் வகையில், தலா ஒரு லட்சம் பணமதிப்பு கொண்ட ஒரு கோடி கிசான் அட்டைகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

ஆகஸ்ட் 17-ம் தேதி நிலவரப்படி, 1.22 கோடி கிசான் அட்டைகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த அட்டைகளுக்கு ஒட்டுமொத்தமாக ரூ.1,02,065 கோடி மணமதிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதனால், வேளாண் துறை பெரிய அளவில் வளர்ச்சியைக் காணும் என்று அரசு தெரிவித்துள்ளது.

மத்திய அரசு அறிவித்த தற்சார்புத் திட்டத்தில், விவசாயிகள், மீனவர்கள் மற்றும் பால்பண்ணையாளர்கள் பயன்பெறும் வகையில் ரூ.2 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், இதன் மூலம்ட 2.5 கோடி பேர் பயன்பெறுவார்கள் என்றும் அறிவித்திருந்தது. அந்த திட்டத்தின் கீழ் இந்த நிதி ஒதுக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com