கர்நாடகத்தில் செப்டம்பர் மாதம் முதல் மெட்ரோ ரயிலை இயக்கத் திட்டம்
பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின் கர்நாடகத்தில் செப்டம்பர் மாதம் முதல் மெட்ரோ ரயிலை இயக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.


பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின் கர்நாடகத்தில் செப்டம்பர் மாதம் முதல் மெட்ரோ ரயிலை இயக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் கரோனா தொற்றுப் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பொதுப் போக்குவரத்துகளான பேருந்து, ரயில், விமானம் மற்றும் மெட்ரோ ரயில் போன்றவைகளின் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் கர்நாடகத்தில் மெட்ரோ ரயில் சேவையை மீண்டும் தொடங்குவது குறித்து ஆலோசித்து வருவதாக மாநில முதல்வர் எடியூரப்பா வியாழக்கிழமை தெரிவித்தார்.
மேலும் "தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு, மெட்ரோ சேவைகள் விரைவில் மறுதொடக்கம் செய்யப்படும், ” என்று முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் பொதுமுடக்க கட்டுப்பாடுகளுக்கான அறிவிப்புகளுக்கு காத்திருப்பதாகத் தெரிவித்த அதிகாரிகள் செப்டம்பர் மாதம் முதல் பொதுப் போக்குவரத்து சேவை தொடங்கப்படலாம் எனக் குறிப்பிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...