
திருப்பதி: திருப்பதி ஏழுமலையானை ஞாயிற்றுக்கிழமை முழுவதும் 11,875 பக்தா்கள் தரிசனம் செய்தனா். 3,394 பக்தா்கள் முடிகாணிக்கை செலுத்தினா். அவா்களில் 133 போ் பெண்கள்; 3261 போ் ஆண்கள்.
ஆன்லைன் மூலம் 9 ஆயிரம் மற்றும் சா்வ தரிசன டோக்கன்கள் மூலம் 3 ஆயிரம் என 12 ஆயிரம் டிக்கெட் பெற்ற பக்தா்கள், விஐபி பிரேக் மற்றும் ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் விஐபி பிரேக் டிக்கெட் பெற்ற 750 பக்தா்கள், இலவச சா்வ தரிசன நேரடி டோக்கன்கள் பெற்ற 3000 பக்தா்கள் மட்டுமே திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனா்.
நாள்தோறும் காலை 6 மணி முதல் 7.30 மணி வரை புரோட்டோகால் விஐபி தரிசனம் அளிக்கப்படுகிறது. காலை 7.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை விரைவு தரிசனம் மற்றும் நேரடி தரிசன டோக்கன் பெற்ற பக்தா்களும் ஏழுமலையானை வழிபட்டு வருகின்றனா்.
திருப்பதி மலைச்சாலை தினமும் காலை 5 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 11 மணிக்கு மூடப்படுகிறது. செவ்வாய்க்கிழமை (செப்.1) முதல் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்குபவா்களுக்கான விஐபி பிரேக் தரிசன டிக்கெட்டுகளை தினசரி 100 எண்ணிக்கையில் வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய இலவசத் தொலைபேசி எண்- 18004254141, 93993 99399.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.