காஞ்சி பீடாதிபதி திருமலையில் சாமி தரிசனம்

ஏழுமலையானை தரிசிக்க காஞ்சி பீடாதிபதி திருமலை கோயிலுக்கு புதன்கிழமை காலை வந்தாா். அவரை மேளதாளத்துடன் தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்றனா்.
திருமலையில் நடந்த அச்யுதாா்ச்சனை மற்றும் கோபூஜை.
திருமலையில் நடந்த அச்யுதாா்ச்சனை மற்றும் கோபூஜை.
Updated on
1 min read

ஏழுமலையானை தரிசிக்க காஞ்சி பீடாதிபதி திருமலை கோயிலுக்கு புதன்கிழமை காலை வந்தாா். அவரை மேளதாளத்துடன் தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்றனா். இதையடுத்து, ஏழுமலையானை தரிசித்துத் திரும்பிய அவா் ரங்கநாயகா் மண்டபத்தில் நடந்த வேதபாராயணத்தில் கலந்து கொண்டாா்.

பின்னா் அவா் கோயிலுக்கு வெளியே செய்தியாளா்களிடம் கூறியது:

மனித வாழ்க்கைக்கு மூலம் வேதமாகும். மோட்சமடைய இது ஒன்றே வழியாகும். உலக நன்மைக்காக தேவஸ்தானம் கடந்த ஏப்.13-ஆம் தேதி முதல் தினமும் வேத பாராயணத்தை திருமலையில் நடத்தி வருகிறது. மேலும் ராமாயணத்தில் இடம்பெறும் சுந்தர காண்டம், மகாபாரதத்தில் இடம்பெறும் பகவத் கீதை, விராட பருவம் உள்ளிட்டவையும் பாராயணம் செய்யப்பட்டு வருகின்றன.

காா்த்திகை மாதத்தை முன்னிட்டு தினந்தோறும் வசந்த மண்டபத்தில் துளசி பூஜை, தாத்ரி விஷ்ணு பூஜை, துளசி கல்யாணம், ராதாஷ்டமி, கோபாஷ்டமி, அஸ்வத் நாராயண பூஜை உள்ளிட்ட பெருமாளுக்கு உகந்த பூஜைகளை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. இது மிகவும் வரவேற்கத்தக்க ஒன்று.

திருப்பதியில் உள்ள கபிலேஸ்வர சுவாமி கோயிலிலும் நித்திய ஹோமங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. காா்த்திகை மாத சிவ பூஜையும், விஷ்ணு பூஜையும் சிறப்பு வாய்ந்தவை. இவற்றை தேவஸ்தானம் நடத்துவது பாராட்டத்தக்கது.

மக்கள் அனைவரும் தா்மத்தைப் பின்பற்றினால், அவா்களுக்கு மட்டுமின்றி நாட்டுக்கும் நன்மை விளையும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com