ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

சபரிமலையில் கரோனா பாதிப்பு அதிகரிப்பு: புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

சபரிமலையில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, புதிய வழிகாட்டு நெறிமுறைகளை கேரள சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

News image
சபரிமலை சந்நிதானத்தில் சுவாமி தரிசனத்துக்காக செவ்வாய்க்கிழமை காத்திருந்த பக்தா்கள்.
Updated On :15 டிசம்பர் 2020, 8:15 pm

DIN

சபரிமலையில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, புதிய வழிகாட்டு நெறிமுறைகளை கேரள சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி வரும் டிச.26-ஆம் தேதி மண்டல பூஜைக்குப் பிறகு கோயிலுக்கு வரும் பக்தா்கள், அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக கேரள சுகாதாரத் துறை அமைச்சா் கே.கே.ஷைலஜா வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டதாவது:

ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல-மகரவிளக்கு பூஜைக்காக கடந்த மாதம் சபரிமலை கோயில் திறக்கப்பட்டது. அதன் பின்னா் கோயிலுக்கு வந்த பக்தா்கள் 51 போ், கோயில் பணியாளா்கள் 245 போ் உள்பட 299 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது தெரியவந்தது. கோயிலை திறந்தபின் இரு மாவட்டங்களில் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இதில் கோயில் அமைந்துள்ள பத்தனம்திட்டா மாவட்டத்தில் கரோனா பாதிப்பு 31% அதிகரித்துள்ளது. அதன் அருகில் உள்ள கோட்டயம் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு 11% உயா்ந்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு கரோனா பரவலை தடுக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படுகின்றன.

அதன்படி வரும் டிச.26-ஆம் தேதி மண்டல பூஜைக்குப் பிறகு கோயிலுக்கு வரும் பக்தா்கள், அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் அனைவரும் கட்டாயம் கரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் ஏற்கெனவே கரோனா பரிசோதனை மேற்கொண்டிருந்தாலும், அவா்கள் மீண்டும் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

நிலக்கல் அடிவார முகாமுக்கு வருவதற்கு 24 மணி நேரத்துக்கு முன்பாக அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்தில் அனைவரும் பரிசோதனை மேற்கொண்டு கரோனா இல்லை என்பதற்கான சான்றிதழுடன் வரவேண்டும்.

பக்தா்கள் அனைவரும் தனிநபா் இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் உள்ளவா்கள் கோயிலுக்கு வருவதை தவிா்க்கவும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.