அடுத்த 5 ஆண்டுகளில் 5 கோடி புதிய வேலை வாய்ப்புகள்: நிதின்கட்கரி தகவல்

சிறு குறு தொழில்களில் அடுத்த 5 ஆண்டுகளுக்குள்ளாக 5 கோடி புதிய வேலை வாய்ப்புகள் உருவாக வாய்ப்புள்ளதாக மத்திய அமைச்சர் நிதின்கட்கரி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
மத்திய அமைச்சர் நிதின்கட்கரி
மத்திய அமைச்சர் நிதின்கட்கரி

சிறு குறு தொழில்களில் அடுத்த 5 ஆண்டுகளுக்குள்ளாக 5 கோடி புதிய வேலை வாய்ப்புகள் உருவாக வாய்ப்புள்ளதாக மத்திய அமைச்சர் நிதின்கட்கரி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

இந்தியத் தொழில்துறைக் கூட்டமைப்பின் நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் நிதின்கட்கரி பங்கேற்றுப் பேசினார்.

அப்போது சிறு, குறு தொழில்துறைகள் மூலம் இதுவரை 11 கோடி வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளதாகத தெரிவித்த அமைச்சர் நிதின்கட்கரி மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30 சதவிகிதமாக உள்ள சிறு, குறு தொழில்களின் பங்களிப்பை 40 சதவிகிதமாக உயர்த்தவும், ஏற்றுமதியில் அதன் பங்களிப்பை 48 சதவிகிதத்திலிருந்து 60 சதவிகிதமாக உயர்த்தவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும் அடுத்த 5 ஆண்டுகளில் சிறு குறு தொழில்துறையில் புதிதாக 5 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டார்.

கரோனா தொற்று நோய் பாதிப்பிற்கு மத்தியில் அரசு பல்வேறு கொள்கை மாற்ற நடவடிக்கை மூலம் சிறு குறு தொழிலுக்கு உதவியதாகத் தெரிவித்த கட்கரி அவை முதலீட்டு அதிகரிப்பிற்கு வழிவகுத்ததாகக் குறிப்பிட்டார்.

மேலும் சாலை மேம்பாட்டுத் துறையில் ரூ.25 லட்சம் கோடி முதலீட்டை அரசாங்கம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்த நிதின் கட்கரி தேசிய நெடுஞ்சாலைகளில் வசூலிக்கப்படும் சுங்கவரி வருமானம் நடப்பு நிதியாண்டில் ரூ.34,000 கோடியாக உயரும் எனக் குறிப்பிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com