உள்நாட்டு உற்பத்தியில் 30 கோடி மக்களுக்கு கரோனா தடுப்பூசி: சுகாதாரத்துறை

உள்நாட்டு உற்பத்தியில் அடுத்த 6 முதல் 7 மாதங்களில் 30 கோடி மக்களுக்கு கரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் (கோப்புப்படம்)
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் (கோப்புப்படம்)
Updated on
1 min read


உள்நாட்டு உற்பத்தியில் அடுத்த 6 முதல் 7 மாதங்களில் 30 கோடி மக்களுக்கு கரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டில் கரோனா தடுப்பு மருந்து தயாரிப்பதற்கான பணிகளில் மருத்துவ நிபுணர் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் கூறினார்.

தில்லியில் அமைச்சர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர், உள்நாட்டிலேயே கரோனா தடுப்பு மருந்தை கண்டறியும் வகையில் விஞ்ஞானிகளும், மருத்துவ நிபுணர் குழுவினரும் மரபணு வரிசை குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளனர்.

அடுத்த 6 முதல் 7 மாதங்களில் 30 கோடி மக்களுக்கு கரோனா தடுப்பு  மருந்தை வழங்கும் திறன் உள்ளது.

தற்போது நாட்டில் ஒரு கோடிக்கும் அதிகமானோருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதில் 95 லட்சத்து 50 ஆயிரம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அதிக அளவு குணமடைவோர் விகிதம் இந்தியாவில் மட்டுமே உள்ளது. இந்தியாவில் கரோனாவிலிருந்து குணமடைவோர் விகிதம் 95.46 சதவிகிதமாக உள்ளது.

மேலும், கரோனாவுக்கு எதிரான போரில் முன் நின்று வழிநடத்தும் பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். முன் நின்று வழிநடத்துவதோடு மட்டுமல்லாமல், கரோனா தடுப்பு மருந்துகள் தயாரிக்கப்படும் இடங்களுக்கு தானாக சென்று தயாரிப்பு பணிகள் குறித்து கேட்டறிகிறார் என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com