பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

நாட்டில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் 3.09% ஆகக் குறைவு

இந்தியாவில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து, தற்போது 3.09 சதவீதமாக உள்ளது.

News image
நாட்டில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் 3.09% ஆகக் குறைவு
Updated On :19 டிசம்பர் 2020, 12:39 pm

DIN

புது தில்லி: இந்தியாவில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து, தற்போது 3.09 சதவீதமாக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக நோய்த் தொற்று ஏற்பட்டு குணமடைந்து வருபவர்களின் எண்ணிக்கை நாட்டில் அதிகரித்துள்ளது. இந்தத் தொடர் நிலையால் இந்தியாவில் தற்போது 3,08,751 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 25,152 பேருக்கு புதிதாகத் தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 29,885- ஆக பதிவாகியுள்ளது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதால் இந்தியாவில் பத்து லட்சம் மக்களில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உலக அளவில் குறைவாக (223) உள்ளது.

கரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் மற்றொரு மைல்கல் சாதனையாக நாட்டின்‌ மொத்தப் பரிசோதனையின் எண்ணிக்கை 16 கோடியைக் கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 11 லட்சத்து 70 ஆயிரத்து 868 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த எண்ணிக்கை 16,00,90,514-ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் ஒரு நாளில் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளின் எண்ணிக்கை 15 லட்சமாக அதிகரித்துள்ளது. பரிசோதனையின் எண்ணிக்கை  அதிகரிப்பதால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சரிந்து வருகிறது.

தற்போது மொத்த பாதிப்பு 6.25 சதவீதமாக உள்ளது. 15 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் தேசிய அளவை விட குறைவாகவே பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டில் மொத்தம் 95.5 லட்சம் (95,50,712) பேர் குணமடைந்துள்ளனர். உலக அளவில் மிக அதிகமாக குணமடைந்தவரின் வீதம் 95.46-ஆக பதிவாகியுள்ளது. தற்போது 92,41,961 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

34 மாநிலங்கள் யூனியன் பிரதேசங்களில் குணமடைந்தவரின் வீதம் 90 சதவிகிதத்தைக் கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 347 பேர் உயிரிழந்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.