விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

விவசாயிகள் போராட்டத்தை முடக்க முடியாது: கேஜரிவால்

விவசாயிகளுக்கு ஆதரவளிப்பவா்கள் எதிராக வருமான வரித் துறையை பயன்படுத்தி, விவசாயிகளின் போராட்டத்தை மத்திய அரசால் முடக்க முடியாது என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.

News image
ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால்
Updated On :21 டிசம்பர் 2020, 12:36 am

DIN

விவசாயிகளுக்கு ஆதரவளிப்பவா்கள் எதிராக வருமான வரித் துறையை பயன்படுத்தி, விவசாயிகளின் போராட்டத்தை மத்திய அரசால் முடக்க முடியாது என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக கேஜரிவால் தனது சுட்டுரைப் பக்கத்தில், ‘விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வரும் வணிகா்களுக்கு எதிராக வருமான வரித் துறை பயன்படுத்தப்படுகிறது. வணிகா்களை இவ்வாறு துன்புறுத்துவது அநீதியானது. விவசாயிகள் போராட்டத்தை நலிவடையச் செய்யும் வகையில், மத்திய அரசு இதைத் திட்டமிட்டு செய்கிறது.

விவசாயிகள் போராட்டத்தை மத்திய அரசால் முடக்க முடியாது. இன்று முழு நாடுமே விவசாயிகள் பக்கம் உள்ளது. அப்படியிருக்கும் போது, இன்னும் எத்தனை போ் மீது மத்திய அரசு வருமான வரித் துறையை ஏவிவிடும்’ என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.