விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

ஒரு சதவிகிதத்திற்கும் கீழ் குறைந்த கரோனா : தில்லி சுகாதாரத்துறை

தில்லியில் ஒரு சதவிகிதத்திற்கும் கீழ் கரோனா வைரஸ் தொற்று குறைந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார்.

News image
தில்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் (கோப்புப்படம்)
Updated On :23 டிசம்பர் 2020, 7:05 am

DIN


தில்லியில் ஒரு சதவிகிதத்திற்கும் கீழ் கரோனா வைரஸ் தொற்று குறைந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார்.

தில்லியில் மூன்றாவது முறையாக கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வந்த நிலையில், தற்போது படிப்படியாக குறையத்தொடங்கியுள்ளது.

தில்லியில் இது தொடர்பாக பேசிய அமைச்சர் சத்யேந்திர ஜெயின், கரோனா தடுப்பு மருந்தை குறிப்பிட்ட வெப்ப நிலையில் சேமித்து வைப்பதற்கான பணிகள் மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மருந்துகளை சேமித்து அதனை மற்ற பகுதிகளுக்கு கொண்டுசெல்வதற்கான முன்னேற்பாடு பணிகளும் நடைபெற்று வருகின்றன. இதன் மூலம் கரோனா மருந்து வந்தவுடன் அதனை தில்லியின் அனைத்து பகுதிகளுக்கும் விரைவாக கொண்டுசெல்ல இயலும்.

தில்லி ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 90 உறைவிப்பான்கள் வருவதாகவும், ஏற்கனவே அதிகமான உறைவிப்பான் பெட்டிகள் கொண்டுவரப்பட்டுள்ளன. 

தில்லியில் கரோனா பரவல் ஒரு சதவிகிதத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. நாள்தோறும் 80 ஆயிரம் கரோனா பரிசோதனைகள் செய்யப்படுகின்றன என்றும் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.