ரூ.3 கோடி நிதி மோசடி: பாஜக முன்னாள் எம்.பி. மீது வழக்குப்பதிவு

மகாராஷ்டிர மாநிலத்தில் ரூ.3 கோடி வரை நிதி மோசடியில் ஈடுபட்டதாக பாஜக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திலிப் காந்தி மற்றும் வங்கி அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 
பாஜக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திலிப் காந்தி
பாஜக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திலிப் காந்தி
Updated on
1 min read

மகாராஷ்டிர மாநிலத்தில் ரூ.3 கோடி வரை நிதி மோசடியில் ஈடுபட்டதாக பாஜக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திலிப் காந்தி மற்றும் வங்கி அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

கடந்த 2017ஆம் ஆண்டு மகாராஷ்டிரத்தின் அகமது நகரில் உள்ள நகர கூட்டுறவு வங்கியில் முறைக்கேடு நடந்ததாகக் கூறப்படுகிறது. அக்டோபர் முதல் நவம்பர் இடையேயான காலகட்டத்தில் வங்கியில் போலியான ஆவணங்கள் மூலம் சுமார் ரூ.3 கோடி வரை நிதி மோசடி செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்தது.

வங்கியின் தற்போதைய கிளை மேலாளர் பதிவு செய்த புகாரின்படி கூட்டுறவு வங்கி தலைவராக இருந்த பாஜக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திலிப் காந்தி மற்றும் வங்கி அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com