பட்ஜெட் எதிரொலி: சென்செக்ஸ் 700 புள்ளிகள் சரிந்து வர்த்தகம்
2020 - 21 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று தாக்கல் செய்த நிலையில் மும்பை பங்குச் சந்தைகள் கடும் சரிவை சந்தித்தன.


2020 - 21 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று தாக்கல் செய்த நிலையில் மும்பை பங்குச் சந்தைகள் கடும் சரிவை சந்தித்தன.
மத்திய பட்ஜெட்டில், முதலீட்டாளர்களை கவரும் வகையில் எந்த அறிவிப்புகளும் இல்லாத நிலையில், மதியம் 1.30 மணியளவில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 708 புள்ளிகள் சரிந்து 40,015 ஆக இருந்தது.
பிறகு இது மெல்ல சரிவில் இருந்து மீண்டு 40,905ஐ தொட்டது.
இதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி50 162 புள்ளிகள் சரிந்து 11,799 புள்ளிகளைத் தொட்டன.
இன்றைய வணிகத்தில் ஹிந்துஸ்தான் யூனிலிவர், டிசிஎஸ், ஐடிசி, இன்ஃபோசிஸ், எச்சிஎல் டெக்னாலஜிஸ் ஆகிய நிறுவனப் பங்குகள் லாபம் அடைந்தன. லார்சன் அன்ட் டூப்ரோ, எச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ வங்கி, பஜாஜ் பினான்ஸ், கோடாக் மகிந்திரா வங்கி ஆகிய நிறுவனப் பங்குகள் நட்டத்தை சந்தித்தன.
மத்திய பட்ஜெட்டில் புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் திட்டங்களோ, முதலீட்டாளர்களுக்கான சலுகைகளோ இடம்பெறாததே, பங்குச் சந்தைகளில் சரிவு நிலை எட்டக் காரணமானதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...