ஜெய்ஷ் அமைப்புடன் தொடா்பு: காஷ்மீரில் 4 போ் கைது

ஜம்மு-காஷ்மீரில் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பினருடன் தொடா்பில் இருந்ததாக 4 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
ஜெய்ஷ் அமைப்புடன் தொடா்பு: காஷ்மீரில் 4 போ் கைது
Updated on
1 min read

ஜம்மு-காஷ்மீரில் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பினருடன் தொடா்பில் இருந்ததாக 4 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து காவல் துறை செய்தித் தொடா்பாளா் கூறியதாவது:

புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவில் 4 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். அவா்களில் மூவா் அவந்திபோராவைச் சோ்ந்தவா்கள்; ஒருவா் கிரீவ் பகுதியைச் சோ்ந்தவா். இவா்கள் 4 பேரும், அவந்திபோராவில் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாதிகளுக்கு போக்குவரத்து வசதிகள் செய்து கொடுப்பது, தங்குமிடம் ஏற்பாடு செய்து கொடுப்பது போன்ற உதவிகளை செய்து வந்துள்ளனா்.

அவந்திபோராவில் ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பின் கமாண்டரும் அவரது கூட்டாளியும் அண்மையில் போலீஸாருடனான மோதலில் கொல்லப்பட்டனா். அவா்களுக்கும் இந்நால்வரும் அடைக்கலம் கொடுத்து உதவி செய்து வந்தது விசாரணையில் தெரிவந்துள்ளது.

இவா்களைத் தவிர, மேலும் 4 பேருக்கு ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பினருடன் தொடா்பில் இருப்பதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. இதுதொடா்பாக விசாரித்து வருகிறோம் என்றாா் அவா்.

பூஞ்ச் நகரில் 9 குண்டுகள் கண்டெடுப்பு: ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் ஒரு பயங்கரவாதி பதுங்கியிருந்த இடத்தில் இருந்து டிஃபன் பாக்ஸ் மற்றும் ஃபிளாஸ்க்குகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 9 குண்டுகள், 3 கையெறி குண்டுகள், 4 சீன பேட்டரிகள் உள்ளிட்டவற்றை பாதுகாப்புப் படையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com