புது தில்லியில் மாலை 4 மணி வரை 42.20% வாக்குப்பதிவு
70 தொகுதிகளைக் கொண்ட புது தில்லி சட்டப்பேரவைக்கு இன்று காலை தொடங்கிய வாக்குப்பதிவு மந்தகதியில் நடைபெற்று வருகிறது.


புது தில்லி: 70 தொகுதிகளைக் கொண்ட புது தில்லி சட்டப்பேரவைக்கு இன்று காலை தொடங்கிய வாக்குப்பதிவு மந்தகதியில் நடைபெற்று வருகிறது.
கடுங்குளிர் காரணமாக, ஏராளமானோர் வாக்களிக்க வரவில்லை என்று கூறப்படுகிறது. மாலை 4 மணி வரை 42.20% வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன.
முன்னதாக, மாலை 3 மணி வரை 30.18% ஆகவே வாக்குப்பதிவு இருந்தது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். வயதான வாக்காளர்களை வீட்டில் இருந்து அழைத்து வந்து வாக்களிக்கச் செய்யும் நடவடிக்கையிலும் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது.
குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், முன்னாள் துணைக் குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்,. தில்லி ஆளுநர் அனில் பைஜால், முதல்வர் அரவிந்த் கேஜரிவால், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா, பாஜக தலைவர் அத்வானி, மத்திய இணை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்கள் தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் தங்களது வாக்குகளைச் செலுத்தி ஜனநாயகக் கடமையை ஆற்றினர்.
81,05,236 ஆண் வாக்காளர்கள், 66,80,277 பெண் வாக்காளர்கள் உட்பட 1.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக 13,571 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
தில்லி தேர்தலில் பதிவான வாக்குகள் பிப்ரவரி 11ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...